For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நியூராலிங்க் பொருத்தப்பட்ட முதல் மனிதன் | ஆன்லைன் கேம் விளையாடி அசத்தல்!

05:27 PM Mar 21, 2024 IST | Web Editor
நியூராலிங்க் பொருத்தப்பட்ட முதல் மனிதன்   ஆன்லைன் கேம் விளையாடி அசத்தல்
Advertisement

நியூராலிங்க்கை பயன்படுத்தி ஒருவர் ஆன்லைன் கேம் விளையாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

Advertisement

விபத்தில் தோள்பட்டைக்குக் கீழே முடங்கிய 29 வயது நோயாளி, தனது லேப்டாப்பில் செஸ் விளையாடி நேரடி டெமோவைக் காட்டியுள்ளார்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் ஒரு வீடியோ கிளிப்பைப் பகிர்ந்துள்ளனர். கடந்த மாதம், எலோன் மஸ்க் தனது மூளை-கணினி நிறுவனமான நியூராலிங்க் மூலம் மூளை சிப் பொருத்தப்பட்ட முதல் நபர் முழுமையாக குணமடைந்துவிட்டார் என்று கூறினார்.

மஸ்க் பகிர்ந்துள்ள வீடியோ:

எலோன் மஸ்க் தனது X கணக்கில் பகிர்ந்துள்ள வீடியோவில், யூராலிங்க் பிரைன் சிப்பின் உதவியுடன் ஒருவர் யோசித்துக் கொண்டே வீடியோ கேம் விளையாடுவதைக் காண முடிந்தது. இதுமட்டுமின்றி, ஆன்லைன் செஸ் போர்டையும் மனதால் கட்டுப்படுத்த முடியும்.  அதன்மூலம் கணினி மவுஸை ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் நகர்த்துவதிலும் அவர் வெற்றி பெற்றார்.

நோலண்டின் கேம் விளையாடும் லைவ் ஸ்ட்ரீம் பற்றிய தகவல்களை எலோன் மஸ்க் பகிர்ந்துகொண்டார், "நியூராலிங்கின் லைவ் ஸ்ட்ரீம், 'டெலிபதி'யை நிரூபித்தல்... ஒரு கணினியைக் கட்டுப்படுத்துவது மற்றும் வீடியோ கேம்களை சிந்தித்து விளையாடுவது" என்று எழுதினார்.

Tags :
Advertisement