ஜி.டி.என் படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு.. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய மாதவன்..!
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படுபவர் ஜி.டி.நாயுடு. தமிழ் நாட்டின் கோவையை சேர்ந்த இவர் எந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் மக்கள் நலன் சார்ந்த அரிய பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர். இவரைன் நினைவை போற்றும் வகையில் கோயம்புத்தூரில் அண்மையில் திறக்கப்பட்ட புதிய மேம்பாலத்திற்கு இவர் பெயரை தமிழ் நாடு சூட்டியது.
நடிகர் மாதவன் 'ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்' எபெக்ட்' என்ற பெயரில் கேரளாவை சேர்ந்த விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கி நடித்திருந்தார். விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது.
இதனை தொடர்ந்து நடிகர் மாதவன் மறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார். 'ஜி.டி.என்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை கிருஷ்ணகுமார் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்' படத்தை தயாரித்திருந்த அதே தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்போஸ்டரில் மாதவன் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார்.