விமலின் ‘மகாசேனா’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
'பசங்க' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விமல். தொடர்ந்து, அவர் களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சார்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, 'பரமசிவன் பாத்திமா' என்ற படத்தில் நடித்திருந்தார்.
இதையும் படியுங்கள் : Gold Rate | தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,280 உயர்வு.. ஒரு சவரன் எவ்வளவு?
தொடர்ந்து, 'தேசிங்கு ராஜா 2' திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விமலுடன் இணைந்து குக் வித் கோமாளி புகழ், ரவி மரியா, ஹர்ஷிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதற்கிடையே, விமல் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில், சிருஷ்டி, யோகி பாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு ‘மகாசேனா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கூடலூர் அருகே உள்ள சந்தன மலைப்பகுதியில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த நிலையில், ‘மகாசேனா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூரி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.