"Don't Trust Anyone" - வெளியானது ‘Blackmail’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
கடந்த 2006-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘வெயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ் குமார். அதனைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டார்லிங்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ், மு.மாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார்.
Happy to launch the first look poster of @jds_filmfactory First feature film, ‘BLACKMAIL’ directed by @mumaran1#jdsfilmfactory #blackmailFirstLook @gvprakash @teju_ashwini_ @Act_Srikanth @thebindumadhavi @linga_offcl @thilak_ramesh@linga_offcl @ActorMuthukumar @SamCSmusic… pic.twitter.com/phkO5zllij
— VijaySethupathi (@VijaySethuOffl) March 29, 2025
இப்படத்திற்கு ‘Blackmail’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிந்து மாதவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, ‘Blackmail’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதனை நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ரவி மோகன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் "Don't Trust Anyone" என்ற வாக்கியம் இடம்பெற்றுள்ளது.