திமுக நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கூடியது!
சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலையத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கூடியதாக அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது X தள பக்கத்தில் கூறியுள்ளதாவது:
2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.கழகத்தின் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுக்களை அமைத்துள்ளார். அதில், தேர்தலுக்கான திமுகவின் பணிகளை மேற்பார்வையிடவும், ஒருங்கிணைக்கவும் அமைக்கப்பட்டுள்ள குழுவில் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான அண்ணன் கே.என்.நேரு, திமுக அமைப்புச் செயலாளர் அண்ணன் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் அண்ணன் எ.வ.வேலு, அண்ணன் தங்கம் தென்னரசு ஆகியோருடன் நாமும் இடம்பெற்றுள்ளோம்.
இக்குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டத்தை திமுக தலைவரின் அறிவுறுத்தலின்படி, அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் இன்று தொடங்கினோம். குழுவின் சார்பில் தேர்தலுக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரையறுப்பது குறித்து பல்வேறு கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். நாடும் நமதே, நாற்பதும் நமதே! இந்தியா கூட்டணி வெல்லும் வகையில் அயராது உழைப்போம்!
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், தி.மு.கழகத்தின் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுக்களை அமைத்துள்ளார்கள்.
அதில், தேர்தலுக்கான கழகப் பணிகளை மேற்பார்வையிடவும், ஒருங்கிணைக்கவும் அமைக்கப்பட்டுள்ள குழுவில் மாண்புமிகு அமைச்சர் -… pic.twitter.com/ooVU5P28Bs
— Udhay (@Udhaystalin) January 22, 2024