இந்தியாவில் துணிச்சலுக்கான விருது பெற்ற முதல் சிறுவன்... யார் இந்த ஹரீஷ் சந்திர மெஹ்ரா?
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஆண்டுதோறும் ‘பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்’ விருதை வழங்குகிறது. இது தன்னலமற்ற செயல்களைச் செய்த குழந்தைகளுக்கும், வீர தீர செயல்களை செய்த சிறந்த சாதனைகள் கொண்ட சிறு குழந்தைகளுக்கும் உரிய அங்கீகாரம் அளிக்கிறது. விளையாட்டு, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதை பெற இந்திய குடிமகனாகவும், இந்தியாவில் வசிப்பவராகவும், 18 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
ஆனால் எந்த சம்பவத்திற்கு பிறகு இந்த விருது எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா? நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவுக்கும் கூடார தீ விபத்துக்கும் என்ன சம்பந்தம்?
பிரதமரின் தேசிய குழந்தைகள் விருது 1957-ம் ஆண்டு, அதாவது சுதந்திரம் அடைந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கப்பட்டது. என்ன நடந்தது என்றால், அக்டோபர் 2, 1957 அன்று, காந்தி ஜெயந்தியையொட்டி, நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஒரு பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வாணவேடிக்கை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் அப்போதைய பிரதமர் பண்டிட் நேரு பட்டாசு வெடிக்கும் நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு இருந்த கூடாரத்தில் தீப்பிடித்தது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, நாட்டின் துணிச்சலான குழந்தைகளை கௌரவிக்கும் வகையில் ஒரு விருதை தொடங்க பண்டிதர் நேரு உத்தரவிட்டார். இது போன்ற துணிச்சலான குழந்தைகளை நாடு முழுவதும் தேர்வு செய்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்க ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார். இதற்குப் பிறகு, அதே ஆண்டில் தேசிய குழந்தைகள் விருது தொடங்கப்பட்டது. காலப்போக்கில், அதில் புதிய வகைகள் சேர்க்கப்பட்டன. பின்னர் அதன் பெயரும் மாற்றப்பட்டது.
இந்த விருது 5 வயது முதல் 18 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், எந்தவொரு குழந்தையும் ஒரு முறை மட்டுமே விருதுக்கு விண்ணப்பிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் விண்ணப்பங்கள் செய்யப்படுகின்றன. ஸ்கிரீனிங் கமிட்டி அவற்றை ஆய்வு செய்து தேசிய தேர்வுக் குழு இறுதி முடிவை எடுக்கும். இந்த விருதை பெறும் குழந்தைக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது.