கோடையில் வெளியாகும் சூரியின் ‘மாமன்’... போஸ்டர் வெளியிட்டு அறிவித்த படக்குழு!
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகர் சூரி. வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை பாகம் 1' படத்தின் மூலம் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து 'கருடன், கொட்டுக்காளி, விடுதலை பாகம் 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
இதனையடுத்து தற்போது விலங்கு வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ‘மாமன்’ . இதில் சூரி உடன் ஐஸ்வர்யா லட்சுமி , ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .
ஹேஷாம் அப்தூல் வஹாப் இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு தினேஷ் புருஷோதமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் குடும்ப உறவுகள் தொடர்பான உணர்வுகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்று சொல்லப்படுகிறது. மேலும் இப்படம் 2025 கோடையில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.