Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘ஆடுஜீவிதம்’ புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

04:53 PM Mar 07, 2024 IST | Web Editor
Advertisement

பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள  ‘ஆடுஜீவிதம்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Advertisement

மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆடுஜீவிதம். இத்திரைப்படம் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவலை (தி கோட் லைஃப்)  தழுவி எடுக்கப்பட்டதாகும்.  மலையாளத்திலிருந்து தமிழிலும் ஆடு ஜீவிதம் நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.  பிளஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ளார்.  கே.எஸ். சுனில் ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தை ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்துள்ளார்.

கேரளத்திலிருந்து அரபு நாட்டுக்கு வயிற்றுப் பிழைப்புக்காகச் செல்லும் இருவர், அரேபியர்களிடம் மாட்டிக் கொண்டு ஆட்டுப் பட்டிகளில் ஆடுகளாகவே வாழ்ந்த துயரக் கதைதான் இந்த நாவலின் கதைக்கரு.  2010-ம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாதெமி விருதினை இந்நாவல் பெற்றது குறிப்பிடத்தக்கது.  நஜீப் கதாபாத்திரத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ளார்.  இந்தப் படத்துக்காக பிருத்விராஜ் சுமார் 30 கிலோ எடையை குறைத்ததும் குறிப்பிடத்தக்கது.

வரும் மார்ச் 28 ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில்,  படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Tags :
AadujeevithamAmalapaulBlessyPosterPrithviThe Goat Life
Advertisement
Next Article