For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராம்சரணின் ‘கேம் சேஞ்சர்’... டப்பிங் பணிகளை தொடங்கிய படக்குழு!

03:25 PM Aug 07, 2024 IST | Web Editor
ராம்சரணின் ‘கேம் சேஞ்சர்’    டப்பிங் பணிகளை தொடங்கிய படக்குழு
Advertisement

ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது. 

Advertisement

ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம்சரண், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அரசியல் அதிரடி திரில்லர் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் தெலுங்கு மொழியில் இயக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். ஷங்கருடன் இணைந்து இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார்.

இதில், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சில மாதங்களுக்கு முன் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் “ஜரகண்டி” என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் ராம் சரணுக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது.  இதனைத் தெரிவிக்கும் விதமாக, முதல்நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படத்தையும் இறுதிநாளின் புகைப்படத்தையும் ராம் சரண் பகிர்ந்திருந்தார்.  இந்த நிலையில், ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளதை இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, தெரிவித்துள்ளார்.  இப்படத்தை கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement