For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிக்கலை தாண்டி ரிலீஸுக்கு ரெடியான படை தலைவன் - புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு!

படை தலைவன் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
06:27 PM Jun 07, 2025 IST | Web Editor
படை தலைவன் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிக்கலை தாண்டி ரிலீஸுக்கு ரெடியான படை தலைவன்   புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு
Advertisement

மறைந்த தேமுதிக முன்னாள் தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள திரைப்படம் படை தலைவன். இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தை யு. அன்பு என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின்  டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. அதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜயகாந்தை காட்சிபடுத்தியிருந்தனர்.

Advertisement

படை தலைவன் படத்தின் டிரெய்லரில் கடந்த மே 23ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் படம் வெளியீட்டுக்கான புரமோஷன் பணிகளும் நடைபெற்று வந்தது. முன்னதாக இப்படத்திற்கான திரையரங்குகள் ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டு, புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என சண்முக பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறினார்.

இந்த நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி போஸ்டருடன் வெளியாகியுள்ளது. அதன்படி  இப்படம் வருகிற ஜூன் 13 ஆம் தேதி, 500 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Tags :
Advertisement