5 ஆஸ்கர் விருதுகளை வென்ற 'அனோரா’ திரைப்படம் JioHotstar தளத்தில் வெளியாகிறது - ஓடிடி ரிலீஸ் எப்போது ?
திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மார்ச் 3ம் தேதி 5.30 மணிக்கு தொடங்கி கோலகலமாக நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : “அவர்களுக்கு கோபம் வருகிறதெனில் 100 முறை ரமலான் வாழ்த்து சொல்வோம்” – இஃப்தார் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
நகைச்சுவை நடிகர் கானன் ஓ பிரையன் இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்கினார். டோஜா கேட் , அரியானா கிராண்ட் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் நிகழ்ச்சியில் இசையரங்கேற்றினர். 2024 ஆம் ஆண்டு வெளியான படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதில், அனோரா திரைப்படம் 5 விருதுகளை அள்ளிக் குவித்தது. இப்படம் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. அனோரா படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை ஷான் பேக்கர் வென்றார். சிறந்த நடிகைக்கான விருதை அனோரா படத்தில் நடித்த மைக்கி மேடிசன் வென்றார். மேலும், இப்படம் சிறந்த படத்தொகுப்பு, சிறந்த திரைக்கதை என 5 ஆஸ்கர் விருதுகளை வென்றது.
இந்த நிலையில் சிறந்த படம் உள்ளிட்ட 5 முக்கிய ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த அனோரா திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற மார்ச் 17ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளுயாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.