Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரியும் அரனும் சந்திக்கும் விழா கோலாகலம் - பொன்னேரியில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

07:26 AM Apr 28, 2024 IST | Web Editor
Advertisement

பொன்னேரியில் நடைபெற்ற அரியும் அரனும் சந்திக்கும் விழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

பொன்னேரியில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு கரிகிருஷ்ணப் பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ அரிஅரன் சந்திப்பு விழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள்பழமை
வாய்ந்த அருள்மிகு ஸ்ரீசௌந்தர்யவல்லி தாயார் சமேத கரி கிருஷ்ண பெருமாள் திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 23ஆம் தேதி துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான கரிகிருஷ்ணப் பெருமாளும் அகத்தீஸ்வரனும் சந்திக்கும் அரியும் அரனும் சந்திக்கும் சந்திப்பு நிகழ்வு பரத்தாவஜ முனிவர் ஆசிரமம் முன்பாக வான வேடிக்கையுடன் நேற்று நடைபெற்றது .  இதனைத் தொடர்ந்து கருடவாகனத்தில் பெருமாளும் நந்திவாகனத்தில் சிவனும் சந்திக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து வருகிற 29 ஆம் தேதி தேர்த்திருவிழாவும் 3 ஆம் தேதி தெப்ப உற்சவமும் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. அரிஅரன் சந்திப்பு
நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சந்திப்பு நிகழ்வை ஓட்டி கோலாட்டம் மற்றும் பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.  பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அகத்தீஸ்வரர் மற்றும் கரி கிருஷ்ண பெருமாளை தரிசனம் செய்தனர்.

Tags :
AriArandevoteesPonnerithiruvallur
Advertisement
Next Article