For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆ.ராசா வாகனத்தை சோதனையிட்ட போது நடந்தது என்ன? பெண் அதிகாரி சஸ்பெண்ட் ஏன்? - தேர்தல் ஆணையம் விளக்கம்!

04:17 PM Mar 30, 2024 IST | Web Editor
ஆ ராசா வாகனத்தை சோதனையிட்ட போது நடந்தது என்ன  பெண் அதிகாரி சஸ்பெண்ட் ஏன்    தேர்தல் ஆணையம் விளக்கம்
Advertisement

நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் கார் சோதனை செய்த பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், முழு FST குழுவும் மாற்றப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள மாநிலங்களுக்கு இடையிலான சோதனைச் சாவடியில், திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் கார் சோதனை செய்ததில் மெத்தனம் இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வந்தன. இந்நிலையில் நீலகிரி தேர்தல் அதிகாரி மற்றும் செலவினப் பார்வையாளர் விசாரணையில் ஈடுபட்டனர்.

அதன் அடிப்படையில் பறக்கும் படை குழுவின் தலைவி கீதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் முழு FST குழுவும் மாற்றப்பட்டுள்ளது. செலவினப் பார்வையாளர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். கண்காணிப்பு குழுவினர் பதிவு செய்த வீடியோக்களையும் பார்வையிட்டனர்.

வீடியோ மூலம்,  திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் கார் மேலோட்டமான சோதனை செய்யப்பட்டது உறுதியாகிறது. ஒரு முக்கிய வேட்பாளரிடம் மென்மையான அணுகுமுறையை கடைபிடித்தது தவறானது. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. இது போன்ற செயல்பாடுகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement