பிக்பாஸ் 8 | டபுள் எவிக்ஷனில் ஜெஃப்ரியை தொடர்ந்து வெளியேற போகும் பெண் போட்டியாளர்!
2 முறை டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில் இந்த வாரம் ஜெஃப்ரியை தொடர்ந்து பெண் போட்டியாளர் ஒருவர் வெளியேறியுள்ளார்.
இதுவரை நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சிகளை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அவர் படபிடிப்புகளில் பிஸியாக இருந்ததால் இந்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.18 போட்டியாளர்களுடன் 6 அக்டோபர் 2024 அன்று நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அவர்களை தொடர்ந்து நவம்பர் 3 ஆம் தேதி அன்று 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் கலம் இறக்கப்பட்டனர்.
எவிக்ஷன் காரணமாக இதுவரை 12 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். 12 ஆவது வாரம் ஆன நிலையில் இன்னும் வீட்டில் 12 பேர் மீதம் உள்ளனர். இதுவரை 2 முறை டபுள் எவிக்ஷன் நடந்துள்ளது. இந்நிலையில் 12ஆவது வாரமான இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதன்படி நேற்று (டிச-28) ஜெஃப்ரி வெளியேரினார்.அவரை தொடர்ந்து இன்று (டிச-29) அன்ஷிதா வெளியேற போவதாக தகவல் கிடைத்துள்ளது.
ஜெஃப்ரி பெரும்பாலும் தனது நேரத்தை பெண் போட்டியாளர்களுடனே செலவளித்தார். அதுவே அவரது எவிக்ஷனுக்கு காரணமாக அமைந்தது என கூறப்படுகிறது.அன்ஷிதா மற்றும் அர்ணவ் பற்றி முன்னரே பல சர்ச்சைகள் ஊடகத்தில் வெளியானது. அவர்களை வைத்து பிக்பாஸ் வீட்டில் ஏதாவது கிசுகிசு வெளியாகுமா என்று எதிர்பார்த்த நிலையில் அர்ணவ் எலிமினேட் ஆகி வெளியே சென்று விட்டார்.பின்னர் பணப்பெட்டியை எதிர் பார்த்திருந்த நிலையில் பணப்பெட்டி வரும் முன்னரே அன்ஷிதா வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.