கொலை வழக்கின் செலவுக்காக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்ற பிரபல ரவுடி கும்பல் | பொறி வைத்து பிடித்த போலீசார்!
கொலை செய்ய திட்டம் தீட்டி வழக்கின் செலவுக்காக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்ற பிரபல ரவுடி கும்பலை போலீசார் பொறி வைத்து பிடித்த சம்பவம் அறங்கேறியுள்ளது. எங்கே நடந்தது? இந்த குற்ற சம்பவம்....
புதுச்சேரி வில்லியனூர் அம்மாநகர் சுடுகாடு பகுதியில் சந்தேகபடும் படுயான இளைஞர்கள் சிலர் சுற்றி திரிவாதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர்.
அப்போது அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களான கத்தி உருட்டு கட்டை, மிளகாய் தூள் உள்ளிட்டவை இருப்பதை கண்ட போலீசார் அவர்களை கைது செய்து விசாரனை நடத்தினர்.
போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கைது செய்யப்பட்ட கலைக்குமார், அப்பச்சி பிரகாஷ் மற்றும் சதிஷ், சுரேஷ், கோகுல் ஆகியோர் அப்பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகள் என்பது தெரியவந்தது.
கலைக்குமார் என்ற பிரபல ரவுடியை சில மாதங்களுக்கு முன்னர் நடராஜ் நகரை சேர்ந்த சரண் என்பவர் கொலை செய்ய திட்டமிட்டு அவரை அரிவாலாள் வெட்டி உள்ளார். இதில் சிறு காயங்களுடன் கலைக்குமார் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசார் சரனை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
இந்நிலையில் சரண் தற்போது சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்துள்ளார், இதனை அறிந்த கலைக்குமார் தனது கூட்டாளிகளுடன் சரனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர், அவ்வாறு கொலை செய்த பின்னர் அவ்வழக்கின் செலவிற்க்கு பணம் தேவை என்பதால் வில்லியனூர் புறவழிச்சாலை பகுதியில் பொதுமக்களிடம் பணம் அல்லது விலை உயர்ந்த பொருட்களை வழிப்பறி செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.அதனை அடுத்து ஐந்து பேரையும் நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்திய போலீசார், அவர்களை காலாபட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்
பொதுமக்களின் தகவலை அடுத்து நடக்க இருந்த கொலை மற்றும் கொள்ளையை தடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினருக்கு பொது மக்களும் காவல்துறை உயர் அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.