For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வீட்டில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகை - உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர்!

03:24 PM Jun 10, 2024 IST | Web Editor
வீட்டில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகை   உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர்
Advertisement

நடிகை நூர் மாளபிகா தாஸ் மும்பையில் தனது வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  

Advertisement

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் நூர் மாளபிகா தாஸ். விமான பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த இவர், இந்தி வெப்தொடர்கள் மூலம் பிரபலமானார். இவர், சிஸ்கியான்,  சரம்சுக் உள்ளிட்ட பல வெப்தொடர்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகையான கஜோல் நடித்த ‘தி டிரையல்’ வெப்தொடரில் இவர் நடித்துள்ளார். அந்த கதாபாத்திரம் அவருக்கு பெயரையும், புகழையும் வாங்கிக் கொடுத்தது. இவர் மும்பை லோகந்தவாலா பகுதியில் ஒரு வீடு எடுத்து தங்கி நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் நூர் மாளபிகா தன் வீட்டில் இருக்கும் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. நூரின் வீட்டில் இருந்து ஏதோ துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் ஓஷிவாரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்கள். போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் அழுகிய நிலையில் பிணமாக நூர் இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நூர் மாளபிகாவின் உடலை வாங்க அவரின் உறவினர் யாரும் முன்வரவில்லை. இதையடுத்து போலீசாரும், என்ஜிஓவும் சேர்ந்து நூரின் இறுதிச்சடங்கை செய்துள்ளனர். 37 வயதான நூர் தற்கொலை செய்து கொண்டது குறித்து அறிந்த சக நடிகர்கள், நடிகைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நூரின் நெருங்கிய நண்பரான நடிகர் ஆலோக்நாத் பதக், “எனக்கு அவரை பல ஆண்டுகளாக தெரியும். அவருடன் சேர்ந்து பல படங்கள் , வெப்தொடர்களில் நடித்திருக்கிறேன். நூரின் மரணம் மிகுந்த கவலை அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement