For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Meta நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம் விதித்த ஐரோப்பிய ஆணையம்... காரணம் என்ன?

10:56 AM Nov 15, 2024 IST | Web Editor
 meta நிறுவனத்துக்கு ரூ 7 ஆயிரம் கோடி அபராதம் விதித்த ஐரோப்பிய ஆணையம்    காரணம் என்ன
Advertisement

ஐரோப்பிய ஆணையம் மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடியை அபராதமாக விதித்துள்ளது.

Advertisement

கடந்த 2004ல் அமெரிக்காவை மையமாக கொண்டு மார்க் ஜுக்கர்பர்க் என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து பேஸ்புக் என்ற நிறுவனத்தை தொடங்கினார். உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்கு கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளமாக பேஸ்புக் முன்னணியில் உள்ளது. தற்போது மெட்டா எனும் நிறுவனத்தின் கீழ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இயங்கி வருகின்றன. இவற்றை மார்க் ஜுக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார்.

இந்தநிலையில், 'பேஸ்புக்' சமூக வலைத்தளத்தை நடத்தி வரும் 'மெட்டா' நிறுவனம் போட்டியாளர்களை ஒடுக்கும் வகையில் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிரசல்ஸ் நாடு புகார் தெரிவித்தது. இதுகுறித்து 27 நாடுகளின் ஒழுங்குமுறை அதிகாரிகள் அடங்கிய ஐரோப்பிய ஆணையம் நீண்ட நாட்களாக விசாரணை நடத்தி வந்தது.

இறுதியில், மெட்டா நிறுவனத்துக்கு சுமார் 80 கோடி யூரோ (இந்திய மதிப்பில் ரூ.7 ஆயிரத்து 120 கோடி) அபராதம் விதித்துள்ளது. ஆனால், போட்டியாளர்களும், வாடிக்கையாளர்களும் எந்த வகையில் பாதிக்கப்பட்டனர் என்பது நிரூபிக்கப்படவில்லை என்று மெட்டா நிறுவனம் தெரிவிள்ளது. மேலும், இந்த வழக்கை மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்தது.

Advertisement