For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெடித்துச் சிதறிய எரிமலை - ஜப்பான் கடலில் உருவான புதிய தீவு..!

05:27 PM Nov 09, 2023 IST | Jeni
வெடித்துச் சிதறிய எரிமலை   ஜப்பான் கடலில் உருவான புதிய தீவு
Advertisement

ஜப்பானில் கடலுக்கடியில் உள்ள எரிமலை வெடித்ததன் விளைவாக, கடற்பரப்பில் புதிதாக தீவு ஒன்று உருவாகியுள்ளது.

Advertisement

தெற்கு ஜப்பானில் ஐவோ ஜிமா தீவுக்கு 1 கிமீ தூரத்தில் உள்ள பெயரிடப்படாத எரிமலை ஒன்று மூன்று வாரங்களுக்கு முன்னர் வெடிக்கத் தொடங்கியது. இந்த வெடிப்பு தொடங்கிய பத்து நாட்களுக்குள், எரிமலையில் இருந்து கிளம்பிய சாம்பலும் பாறைகளும், ஆழமில்லாத கடற்பரப்பில் குவிந்து, அதன் முனை கடலுக்கு மேல் உயர்ந்துள்ளது. இது, புதிய தீவு ஒன்று உருவானது போல காட்சியளிக்கிறது.

இந்த நிலம், 100 மீட்டர் விட்டம் கொண்டதாகவும், 20 மீட்டர் உயரம் கொண்டதாகவும் உள்ளது. ஆனால் இந்த தீவு இதேபோன்று நிலையாக இருக்காது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜப்பானில் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நிகழ்ந்தாலும், தீவு போன்று உருவாவது அரிது என்று ஜப்பான் கடல்சார் ஆய்வு முகமை ஆராய்ச்சியாளர் யுஜீ உசாய் கூறுகிறார்.

இதையும் படியுங்கள் : மதிய உணவில் முட்டை பிரியாணி - பள்ளி மாணவர்களுக்கு வழங்க மகாராஷ்டிரா அரசு முடிவு

இந்த சேர்மானம் குறித்தும், அதன் வளர்ச்சி குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னரும், உலகின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. உலகம் முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட எரிமலைகள் இருப்பதும், அதில் 100-க்கும் மேற்பட்ட எரிமலைகள் ஜப்பானில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement