நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்து நெதர்லாந்து அணிகள் மோதும் 40-வது லீக் ஆட்டம் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணியின் இன்னிங்சை ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மலான் தொடங்கினர்.
50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 339 ரன்களை குவித்தது. கஸ் அட்கின்சன் 2 ரன்னும், அடில் ரசித் 1 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். பென் ஸ்டோக்ஸ் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நெதர்லாந்து அணியை பொறுத்தவரை பாஸ் டி லீடி 3 விக்கெட்டும், அர்யன் தட், லோகன் வன் பீக் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். நெதர்லாந்து அணி 340 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்தது. பின்னர் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பரேசி மற்றும் மேக்ஸ் ஓயட் ஆகியோர் கிரீஸ்க்கு வந்தனர். நெதர்லாந்தின் ஸ்கோர் 3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து பவுலர் கிறிஸ் வோக்ஸ் வீசிய 5வது ஓவரில் மேக்ஸ் ஓ டௌவ் 5 ரன்களில் மொயீன் அலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். நிதனமாக விளையாடி வந்த வெஸ்லி பாரேசி 37 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். 49 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்த சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், வில்லி பந்தில் கிறிஸ் வோக்ஸூடம் கேட்சானார். நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 42 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து மொயீன் அலி வீசிய 34 ஓவரில் வீழ்ந்தார். வான் பீக் 2 ரன்னில் அவுட்டாகி நடையைக்கட்டினார்.