For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இலங்கையிடம் தொடர்ந்து 5 ஆவது முறையாக தோல்வியை தழுவியது இங்கிலாந்து அணி..!

10:21 PM Oct 26, 2023 IST | Student Reporter
இலங்கையிடம் தொடர்ந்து 5 ஆவது முறையாக தோல்வியை தழுவியது இங்கிலாந்து அணி
Advertisement

இன்றைய போட்டியில் இலங்கை அணியிடம் தோல்விடைந்ததன் மூலம் இலங்கையிடம் தொடர்ந்து 5 ஆவது முறையாக தோல்வியை தழுவியது இங்கிலாந்து அணி.

Advertisement

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டம்  பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்றது.  இன்றையப் போட்டியில் இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதின.  இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் லகிரு குமாரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ரஜிதா மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர். பெரேரா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் குசல் மெண்டிஸ் 11 ரன்களில் ஆட்டமிழக்க பதும் நிசங்கா மற்றும் சதீரா சமரவிக்கிரம ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி இலங்கை அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர்.

சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத் பதும் நிசங்கா 77 ரன்களுடனும் , சதீரா சமரவிக்கிரம 65 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன்மூலம், 25.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி பெற்றது.  உலகக் கோப்பைகளில் இலங்கையிடம் தொடர்ந்து 5 ஆவது முறையாக தோல்வியை தழுவியது இங்கிலாந்து அணி.

இன்று இங்கிலாந்து அணியை இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், 5 ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளது  இலங்கை அணி. அதுமட்டும் இன்றி, அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை கோட்டை விட்டுள்ளது நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி.

இலங்கை அணி வெற்றிப் பட்டியல்

2007 - 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

2011 - 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

2015 - 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

2019 - 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

2023 - 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

Tags :
Advertisement