Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பயிர்களை சேதப்படுத்திவிட்டு, குத்தாட்டத்தோடு குளியல் போட்ட யானைகள்... விரட்டும் பணியில் #ForestDepartment!

12:03 PM Sep 15, 2024 IST | Web Editor
Advertisement

தென்காசி அருகே விவசாய நிலத்தில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்திவிட்டு, அருகாமையில் இருந்த குளத்தில் குளித்துவிட்டு அப்பகுதியில் சுற்றித் திரியும் யானைகளை வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள விவசாய
நிலங்களில், அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது
தொடர்கதையாகி வருகிறது. விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் வனவிலங்குகளை விரட்டும் முயற்சியில், வனத்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் இரண்டு யானைகள் மேற்கு தொடர்ச்சி மலைப்
பகுதியில் இருந்து கீழே இறங்கி, பண்பொழி பகுதியில் உள்ள விவசாய நிலங்களை
சேதப்படுத்தியுள்ளது. அப்போது அதனை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் ஈடுபட்டனர்.

ஆனால் எந்தவிதமான அச்சமும் இன்றி, கூலாக யானையானது விவசாய நிலங்களுக்குள்
இருந்து வெளியேறி அருகாமையில் உள்ள குளத்திற்கு சென்றது. அங்கு புத்துணர்ச்சியாக நீச்சல் அடித்து ஆனந்த குளியலிட்டது. பின்னர் சகஜமாக வெளியேறி நடந்து சென்றுள்ளது.

எந்தவிதமான அச்சமும் இன்றி சகஜமாக சென்ற யானையை அதனுடைய போக்கிலே விட்டு, அதனை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் தற்போது வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

Tags :
BathElephantForest DepartmentTenkasi
Advertisement
Next Article