‘தேர்தல் ஆணையம் பெரும் தோல்வி அடைந்தது’ - கொல்கத்தா உயர்நீதிமன்றம் கருத்து!
திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான எவ்வித இழிவான விளம்பரங்களையும் பாஜக வெளியிட கூடாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி வெளியிட்ட அவதூறு தேர்தல் விளம்பரத்தில் நடவடிக்கை எடுப்பதில் இந்திய தேர்தல் ஆணையம் பெரும் தோல்வி அடைந்துவிட்டதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் குறித்து அவதூறு செய்யும் வகையில் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பத்திரிக்கைகளில் பாஜக விளம்பரங்களை வெளியிட்டது. இதுகுறித்து உண்மைக்கு புறம்பான பொய் செய்திகளை பாஜக வெளியிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளது என மே.5 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புகாரளித்தது.
ஆனால், தேர்தல் ஆணையம் தரப்பில் புகாரின் மீது எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் திரிணாமூல் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,
திரிணாமுல் காங்கிரஸின் புகாரை, தேர்தல் ஆணையம் உரிய நேரத்திற்குள் தீர்த்திருக்க வேண்டும். தேர்தலுக்கு பின் புகார்களை தீர்ப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை” எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
தேர்தல்களின் போது, ஊடகங்கள் எந்தவொரு வேட்பாளர் அல்லது அரசியல் கட்சிக்கு எதிராக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சரிபார்க்கப்படாத தகவல்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.