Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் விவரங்களை அறிய புதிய செயலி அறிமுகம்!

10:33 AM Apr 01, 2024 IST | Web Editor
Advertisement

வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் விவரங்கள் குறித்து அறிய செயலி தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இதனால், அனைத்து பிரதான கட்சிகளும் கூட்டணி,  தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 27-ம் தேதி முடிவடைந்த நிலையில், வேட்புமனு பரிசீலினையும் நிறைவு பெற்றது.

இதையும் படியுங்கள் : ஶ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா! - ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து சாமி தரிசனம்!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் கடந்த 28-ஆம் தேதியுடன் இறுதி செய்யப்பட்டு,  அவை சம்பந்தப்பட்ட மக்களவைத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  வாக்காளர் பட்டியலில் நம்முடைய பெயர் இருக்கிறதா,  இல்லையா என்பதை அறிந்திட பிரத்யேக செயலி நடைமுறையில் உள்ளது.  ஓட்டர் ஹெல்ப் லைன் என்ற செயலி மூலமாக வாக்காளர் பட்டியல் பெயர்களை உறுதி செய்யலாம்.

தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டால் அதுகுறித்த புகார்களைத் தெரிவிக்க,  சி-விஜில் எனப்படும் பிரத்யேக செயலி பயன்பாட்டில் உள்ளது.  வீடியோ அல்லது புகைப்பட ஆதாரத்துடன் தேர்தல் நடத்தை விதி மீறல்களைத் தெரிவிக்கலாம்.  சி விஜில் செயலி வழியாக குறிப்பிடப்படும் புகார்கள் மீது தேர்தல் ஆணையம் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

வாக்காளர்கள்,  தங்களது தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களையும் அறிந்திடலாம்.  இந்தச் செயலிகளை 'கூகுள் பிளே ஸ்டோரில்' இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  வாக்காளர்களின் வசதிகளைக் கருத்தில் மேலும் பல புதிய செயலிகளை அறிமுகப்படுத்தத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

Tags :
appC Vigil AppElection commissionElection2024Elections2024Lok sabha Election 2024votter helpline
Advertisement
Next Article