Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழலை தேர்தல் பத்திர விவரங்கள் நிரூபிக்க உள்ளன - ராகுல் காந்தி!

05:38 PM Mar 11, 2024 IST | Web Editor
Advertisement

இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழலை தேர்தல் பத்திர விவரங்கள் நிரூபிக்க உள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறும் முறையை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து, பாரத ஸ்டேட் வங்கி பெற்றுள்ள தேர்தல் பத்திரம் தொடர்பான விவரத்தை மார்ச் 13-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க ஜூன் 30-ஆம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் என்று வங்கி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ பதவி கிடைக்குமா? சட்டப்பேரவை செயலகம் விளக்கம் என்ன?

இதையடுத்து, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இதுவரையிலும் பணமாக மாற்றப்பட்ட அனைத்துத் தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் பற்றிய விவரங்களைத் தர ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் கேட்டு பாரத ஸ்டேட் வங்கி தாக்கல் செய்த மனுவை மீது உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இந்த மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, தேர்தல் நன்கொடை பத்திர விவரங்களை நாளை (மார்ச் - 12) மாலைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இணையதளத்தில் மார்ச் 15ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் எஸ்பிஐக்கு உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியிருப்பதாவது :

"நரேந்திர மோடியின் நன்கொடை வியாபாரம் அம்பலமாகிறது.  சுவிஸ் வங்கியில் உள்ள கருப்புப் பணத்தை நூறு நாட்களில் மீட்பதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசு,  சொந்த வங்கியின் விவரங்களை மறைத்ததற்காக உச்சநீதிமன்றத்தில் தலைகுனிந்து நிற்கிறது.
இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழலை தேர்தல் பத்திர விவரங்கள் நிரூபிக்க உள்ளன.

இது ஊழல் தொழிலதிபர்களுக்கும்,  அரசுக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்தி,  நாட்டு மக்கள் மத்தியில் மோடியின் உண்மையான முகத்தை வெளி கொண்டுவரவுள்ளது.
நன்கொடை கொடுத்தால்,  வியாபாரமும்,  பாதுகாப்பும் கிடைக்கும் என்பது தெளிவாக உள்ளது.  நன்கொடையாளர்களுக்கு நன்மைகளை செய்து,  பொதுமக்கள் மீது வரிச்சுமையை ஏற்றுவதுதான் மோடியின் பாஜக அரசு."

இவ்வாறு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்தார்.

Tags :
CongressElection BondRahul gandhisbistate bank of indiaSupreme court
Advertisement
Next Article