Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சுங்கச்சாவடி கட்டண உயர்வு எதிரொலி! #OmniBus உரிமையாளர்களின் ரியாக்சன் என்ன?

09:57 PM Sep 02, 2024 IST | Web Editor
Advertisement

நாடு முழுக்க கடந்த செப். 1ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதன் எதிரொலியாகத் தமிழ்நாட்டில் ஆம்னி பஸ் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாகக் காலை தகவல் வெளியானது. இதற்குப் பலரும் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Advertisement

நமது நாட்டில் முக்கிய நகரங்கள் இடையே போக்குவரத்தை எளிமையாக்க நெடுஞ்சாலைகள் உள்ளன. நகரங்களுக்கு இடையே விரைவாகவும் பாதுகாப்பாகவும் செல்ல உதவும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது நாம் சுங்க கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

சாலை வரி இருக்கும் போது இந்த சுங்க கட்டணம் எதற்கு என்று ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், நாடு முழுக்க உள்ள சுங்கச் சாவடிகளை நீக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு:

சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்பட்டே வருகிறது. நாட்டில் உள்ள சில சுங்கச்சாவடிகளில் குறிப்பிட்டவற்றில் ஏப்ரல் 1ம் தேதி தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்படும். மற்ற சுங்கச்சாவடிகளில் செப். 1ம் தேதி கட்டணம் உயர்த்தப்படும். இந்தாண்டு லோக்சபா தேர்தல் இருந்ததால் ஏப்ரல் மாதத்திற்குப் பதிலாக ஜூன் மாதம் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து நேற்று செப். 1ம் தேதி மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டன. நேற்றைய தினம் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, ஓமலூர், சமயபுரம் உட்பட 25 சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. 5 முதல் 7 சதவீதம் வரை அதாவது ரூ.5 முதல் ரூ.45 வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரலாம் எனக் கூறப்பட்டது. இதற்கிடையே சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வால் மாநிலத்தில் ஆம்னி பஸ் கட்டணங்கள் உயர்வதாகத் தகவல் வெளியானது. எந்தளவுக்குச் சுங்கக் கட்டணம் உயர்ந்து இருக்கிறதோ.. அதற்கேற்ப ஆம்னி பஸ் கட்டணத்தை உயர்த்த ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளதாகத் தகவல் பரவியது.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க விளக்கம்:

ஏற்கனவே விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்னி பஸ் கட்டணமும் உயர்த்தப்படுவதாக வெளியான தகவல் அதிருப்தியை ஏற்படுத்தியது. பண்டிகை நாட்கள் வரும் நிலையில், ஆம்னி பஸ் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று பலரும் வலியுறுத்தினர். இதற்கிடையே இது குறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை:

தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்து கட்டணம் வழக்கத்தை விட உயராது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், பொருளாதார நெருக்கடியை ஆம்னி பேருந்து உரிமையாளர்களே ஏற்றுக்கொள்ளும் வகையில் ஆம்னி பேருந்து கட்டணம் வழக்கத்தைவிட உயராது என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். மேலும், டோல்கேட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
BUSIncreasenews7 tamilOmniRateToll Gate
Advertisement
Next Article