Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"திமுக கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெறும்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு...

04:55 PM Mar 02, 2024 IST | Web Editor
Advertisement

திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தமிழ்நாட்டில் வரலாறு காணாத வெற்றியைப் பெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

Advertisement

ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்க பேரவை கூட்டம் நடைப்பெற்றது.  இந்த கூட்டத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.

இதனைத் தொடர்ந்து,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"பிரதமர் மோடி வந்து சென்றால் தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவிடும் என நினைக்கிறார்கள்.  பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டில் போட்டியிட்டு டெபாசிட் வாங்கிக் காட்டட்டும்.  திமுக கூட்டணியில் சிபிஐ,  சிபிஎம் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்தது.  விசிக, காங்கிரஸ் கட்சிக்கும் தொகுதி பங்கீடு முடிவடைய உள்ளது. திமுக, கூட்டணி பங்கீட்டை சுமுகமாக முடிக்கும்.  கூட்டணியில் எவ்வித சலசலப்பும் இல்லை.

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டில் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்ய இருக்கிறது.  பாஜக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும்.  மேகதாதுவில் அணைக்கட்டியே தீருவோம் நிதி ஒதுக்கீடு செய்கிறோம் என கூறுவது சரியில்லை.  இது உச்சநீதிமன்ற தீர்ப்பை உதாசினப்படுத்தும் வகையில் உள்ளது.  தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி மேகதாதுவில் எந்த பணியையும் தொடங்க முடியாது."

இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

Tags :
BalakrishnanBJPcommunist party of indiaDMKElection2024tamil nadu
Advertisement
Next Article