For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

4 முறை புகார் அளித்தும் காவல்துறை வரவில்லை - நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசப் பிரபுவின் பதபதைக்க வைக்கும் ஆடியோ..!

01:33 AM Jan 25, 2024 IST | Web Editor
4 முறை புகார் அளித்தும் காவல்துறை வரவில்லை   நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசப் பிரபுவின் பதபதைக்க வைக்கும் ஆடியோ
Advertisement

4 முறை புகார் அளித்தும் காவல்துறை வராத நிலையில் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசப் பிரபு மர்ம கும்பல் அரிவாளால் வெட்டும்  பதபதைக்க வைக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது.

Advertisement

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர் நமது  நியூஸ் 7 தமிழ் செய்திக் தொலைக்காட்சியின் செய்தியாளராக கடந்த  ஏழாண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

இவரை இன்று செய்தி சேகரித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். வழக்கம் போல  இரவில் வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் அவரை நோட்டமிட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவர் வெளியே வந்த நேரம் பார்த்து சரமாரியாக அந்த மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது.

இதனைத் தொடர்ந்து வெட்டுக் காயங்களுடன்  உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செய்தியாளர் நேசப் பிரபுவை தகவலறிந்த  காமநாயக்கன்பாளையம் போலீசார் அவரை மீட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த  மர்ம நபர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

மர்ம நபர்கள் தன்னை நோட்டமிட்டு வருவதாக தாக்குதலுக்கு 4 மணி நேரத்திற்கு முன்பே நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு காவல்துறையிடம் புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2 கைகள் மற்றும் நெஞ்சுப் பகுதியில் ஆழமான வெட்டுக் காயங்களுடன் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. பல்லடத்தில் குடித்து விட்டு நடுரோட்டில் போலீசாரிடம் தகராறு செய்ததை, நியூஸ்7 தமிழில் செய்தி வெளியிட்டது; செய்தி வெளியானால் உன்னைக் கொன்றுவிடுவேன் என மர்ம நபர்கள் மிரட்டிய நிலையில் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது அரிவாளால் வெட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் செய்தியாளர் நேசப் பிரபு 4முறைக்கு மேல் காவல்துறைக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். அவர் காவல்துறையிடம் பேசும் ஆடியோக்களை  பதிவு செய்து வைத்துள்ளார்.  கடைசியாக அவர் காவல்துறையிடம் தனக்கு உதவி வேண்டும் என கெஞ்சிக் கூத்தாடிய நிலையிலும் காவல்துறை மெத்தனப் போக்கை கடைபிடித்த நிலையில் இறுதியாக செய்தியாளர் நேசப் பிரபு காவல்துறையிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே மர்ம கும்பல் அவரை ஓட ஓட விரட்டியுள்ளது. இந்த நிகழ்வுகள் அத்தனையும் அவரின் மொபைல் போனில் பதிவாகிய ஆடியோ  தற்போது வெளியாகி கேட்போரது நெஞ்சை பதபதைக்க வைத்துள்ளது,

Tags :
Advertisement