ஒரே படத்தில் இணையும் மஞ்சுமல் பாய்ஸ் - ஆவேசம் பட இயக்குநர்கள்!
மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் ஆவேசம் பட இயக்குநர்கள் புதிய படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு வெளிவந்த ஆவேசம் , மஞ்சுமெல் பாய்ஸ் ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் ஆவேசம் படத்தை ஜித்து மாதவனும், மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை சிதம்பரமும் இயக்கி இருந்தனர். இந்த மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தமிழ் நாட்டிலயே ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக உலக அளவில் ரூ.242 கோடி வசூலித்து மலையாள சினிமாவின் அதிகம் வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையை படைத்தது. இதேபோல ஆவேசம் திரைப்பமும் உலக அளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது .இந்த படமும் பெரும் அளவில் இளைஞர்களை கவர்ந்த படமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், டைரக்டர் ஜித்து மாதவன் மற்றும் சிதம்பரம் இணைந்து புதிய மலையாள படம் ஒன்றை இயக்க உள்ளனர். ஜித்து மாதவன் கதையில் சிதம்பரம் படத்தை இயக்க உள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் கூட்டணியான ஒளிப்பதிவாளர் ஷைஜூ காலித், இசையமைப்பாளர் சுஷின் ஷியாம், கலை இயக்குநர் அஜயன் சல்லிசேரி ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
https://x.com/KvnProductions/status/1874691914269946074/photo/1
இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் பிலிம்ஸ் தயாரிக்கிறது. அறிவிப்பு போஸ்டரை பகிர்ந்த தயாரிப்பு நிறுவனம் மலையாளத்தின் மாஸ்ட்டர்பீஸ் என்றும் மிகப்பெரிய கனவு என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த இரண்டு வெற்றி இயக்குனரும் இணைந்து செயல்படுவதால் இந்த படத்திற்கு எதிர்பார்த்து அதிகரித்துள்ளது.