For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு - தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் புகார்!

09:47 AM Jan 11, 2024 IST | Web Editor
சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு   தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் புகார்
Advertisement

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த விட்டதாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Advertisement

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆவணம் பகுதியைச் சேர்ந்தவர்
அப்துல்லா.  இவரது மகன் சதாம் என்ற அப்துல் அஜீஸ் (31). இவர் நேற்று (ஜன.10)
திடீரென ஏற்பட்ட உடல்நிலை குறைவால் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதையும் படியுங்கள் : அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீங்குமா? - ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு..!

இந்நிலையில், சிகிச்சையின் போது நல்ல நிலையில் இருந்து அனைவருடனும் நன்றாக பேசிக் கொண்டிருந்த அப்துல் அஜிஸ் சில மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு திடீரென இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி மருத்துவமனை ஊழியர்களிடம்  உயிரிழந்தவரின் உறவினர்கள் கேட்ட போது மருத்துவமனை ஊழியர்கள் அதற்கு பதில் கூறாமலும்  மருத்துவமனைக்கு கட்ட வேண்டிய மீதப் பணத்தை கேட்டு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்துல் அஜித்தின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்துல் அஜீஸின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர் முகமது அன்சாரி பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பட்டுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல் அஜீஸ்-ன் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

Tags :
Advertisement