'டியூட்' படத்தின் மூன்றாம் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு..!
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படம் மூலம் இயக்குநாராக அறிமுக பிரதீப், அடுத்தடுத்து கதாநாயகனாக நடித்த ’லவ் டுடே’ மற்றும் ’டிராகன்’ ஆகிய படங்கள் பெரும் வெற்றியடைந்து 100 கோடி கிளப்பில் சேர்ந்தன.
இதனை தொடர்ந்து அவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சுரன்ஸ் கம்பெனி, மற்றும் இயக்குநர் கீர்த்தீஷ்வரன் இயக்கத்தில் டியூட் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதில் டியூட் படத்தை இயக்கியுள்ள கீர்த்தீஸ்வரன் இயக்குநர் சுதா கொங்காராவின் துணை இயக்குநர்களில் ஒருவராவார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக பிரேமலு புகழ் நடிகை மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கும் டியூட் படத்திலிருந்து ’ஊரும் பிளட்’ மற்றும் ’நல்லா இரு போ’ ஆகிய பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ள.
இந்த நிலையில் டியூட் படத்தின் மூன்றாம் சிங்கிளான 'சிங்காரி' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.