Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘விடுதலை’! எழுந்து நின்று 5 நிமிடங்கள் கைதட்டிய பார்வையாளர்கள்!

04:03 PM Feb 01, 2024 IST | Web Editor
Advertisement

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘விடுதலை’ படக்குழுவினர் இயக்குநர் வெற்றிமாறன்,  நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கலந்து கொண்டனர். 

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக நடித்து வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ஆக்கினார்.  அந்த படத்தை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து சூரி தொடர்ந்து கதாநாயகனாகவே சில படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே நிவின் பாலி நடித்து ராம் இயக்கியிருக்கும் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார்.  தொடர்ந்து விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்களை முடித்த சூரி அடுத்து நடிக்கும் கருடன் படத்தை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்குகிறார்.  இந்த படத்துக்குக் கதையை இயக்குநர் வெற்றிமாறன் எழுதியுள்ளார்.

இதையும் படியுங்கள்: IRCTC போல் போலி இணையதளங்கள் உருவாக்கி நூதன மோசடி – போலீசார் தீவிர விசாரணை!

இந்த நிலையில் Rotterdam நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட திரையிடல் விழாவில் நடிகர் சூரி நடித்துள்ள விடுதலை ஒன்று மற்றும் இரண்டு பாகங்கள் திரையிடப்பட்டன. படத்தை பார்த்துவிட்டு பார்வையாளர்கள் எழுந்து நின்று 5 நிமிடங்கள் கைதட்டினர்.  இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன்,  நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்து கலந்து கொண்டனர்.

முன்னதாக இயக்குநர் ராம் இயக்கிய 'ஏழு கடல் ஏழு மலை' படமும் ரோட்டர்டாமில் திரையிடப்பட்டது.  நிவின் பாலி, அஞ்சலி மற்றும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் அதில், கலந்து கொண்டனர்.

Tags :
Actor sooriCinema updatesEzhukadal EzhumalaiNetherlandRotterdamSoorivetrimaaranviduthalaiVijay sethupathi
Advertisement
Next Article