For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Chikitu மியூசிக் வீடியோ நாளை வெளியாகும் என ‘கூலி’ படக்குழு அறிவிப்பு!

Chikitu மியூசிக் வீடியோ நாளை வெளியாகும் என கூலி படக்குழு அறிவித்துள்ளது.
07:01 PM Jun 24, 2025 IST | Web Editor
Chikitu மியூசிக் வீடியோ நாளை வெளியாகும் என கூலி படக்குழு அறிவித்துள்ளது.
chikitu மியூசிக் வீடியோ நாளை வெளியாகும் என ‘கூலி’ படக்குழு அறிவிப்பு
Advertisement

லோகேஷ் கனகராஜ் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமிக்கிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்தாண்டு ஏப்ரலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisement

முன்னதாக இப்படத்தில் நடித்து வரும் நடிகர்களின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியானது. அதன்படி இப்படத்தில் நடிகர் சௌபின் சாஹிர், தயாள் என்ற கதாபாத்திரத்திலும், நடிகர் நாகர்ஜுனா சைமன் என்ற கதாபாத்திரத்திலும், நடிகர் உபேந்திரா கலீஷா என்ற கதாபாத்திரத்திலும், சத்யராஜ் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்திலும், ஸ்ருதிஹாசன் பிரீத்தி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். தொடர்ந்து ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு கடந்தாண்டு ‘சிக்கிடு வைப்...’என்ற தலைப்பில் சிறிய அளவிலான பாடலின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்தது.

இதையடுத்து இப்படத்தில் பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது. ஆனால், அவர் இப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவதாக தகவல் வெளியானது. தொடர்ந்து இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு, படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது. அதன் பின்னர் கடந்த மே 6 ஆம் தேதி ஸ்பெஷல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் “அரங்கம் அதிரட்டுமே, விசிலு பறக்கட்டுமே..” என்ற பின்னணி பாடல் இடம்பெற்றது.

ஏற்கெனவே நட்சத்திர பட்டாளம் அதிகமுள்ள இப்படத்தில் அமீர் கான் இணைந்துள்ளதாக சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அறிவித்தார். இதனால் ரசிகர்களிடையே இப்படத்திற்கு எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்தன.

இந்த நிலையில் இப்படத்தில் இருந்து முன்னதாக வெளியான‘சிக்கிடு வைப்...’பாடலின் மியூசிக் வீடியோ வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மேக்கிங் வீடியோவை பகிர்ந்த படக்குழு, நாளை மாலை 6 மணிக்கு இந்த மியூசிக் வீடியோ தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement