இன்று நடைபெற இருந்த இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் ஒத்தி வைப்பு!
08:22 AM Dec 06, 2023 IST | Web Editor
Advertisement
இன்று நடைபெற இருந்த இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Advertisement
5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள், பெரும் எதிர்பார்ப்பை கூட்டியிருந்த நிலையில், தெலங்கானாவை தவிர, இதர மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது இந்தியா கூட்டணிக்கு பெருத்த ஏமாற்றமாய் அமைந்தது.
இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலுக்கு வியூகம் வகுப்பது குறித்து ஆலோசிக்க, இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் நிதிஷ்குமார், மம்தா, அகிலேஷ் ஆகியோர் பங்கேற்க முடியாததால் கூட்டம் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்கு பிறகு கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.