"300 யுனிட் இலவச மின்சாரம், ரூ.500க்கு சிலிண்டர்" - தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி கொடுத்த காங்கிரஸ்!
டெல்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய பிரதான கட்சிகள் 70 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
தேர்தலில் போட்டிடும் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தற்போது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. அதன்படி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், பெண்களுக்கு மாதம் ரூபாய் 2,500, வழங்கப்படும் என்றும் 5 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை , 1 லிட்டர் எண்ணெய் , 6 கிலோ பருப்பு , 250 கிராம் தேயிலை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ரேஷன் கிட் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
மேலும் ரூபாய் 500க்கு சிலிண்டர், 300 யுனிட் இலவச மின்சாரம் , பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைக்காக பயிற்சி கொடுத்து ஓராண்டுக்கு ரூபாய் 8,500 பணம், ரூ.25 லட்சம் வரை இலவச சிகிச்சை உள்ளிட்ட 5 தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.