Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றிய ஒரே அரசு காங். மட்டுமே" - ராகுல்காந்தி

11:23 AM Feb 17, 2024 IST | Web Editor
Advertisement

விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகளை காங்கிரஸ் அரசு எப்போதும் நிறைவேற்றி வந்துள்ளது என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி  தெரிவித்துள்ளார். 

Advertisement

நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைபயணமான  ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது.  இந்த நடைபயணம் மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது.  தொடர்ந்து 110 மாவட்டங்கள்,  100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாள்கள் இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நடைபயணம் மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது.  இதனைத் தொடர்ந்து அசாம்,  மேகாலயா,  மேற்குவங்கம்,  ஜார்கண்ட் மாநிலங்களைத் தொடர்ந்து பீகாரில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், ரோடஸ் மாவட்டத்தில் நேற்று (பிப்.16) நடைபெற்ற 'விவசாயிகள் நீதி பஞ்சாயத்து' என்ற விவசாயிகளின் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கலந்து கொண்டார்.  இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:

"விவசாயிகளுக்கு, விளை பொருள்களுக்கான உரிய விலை கிடைப்பதில்லை.  2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மத்தியில் 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் உறுதிப்படுத்தப்படும்.  விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகளை காங்கிரஸ் அரசு எப்போதும் நிறைவேற்றி வந்துள்ளது.

பயிர்க் கடன் தள்ளுபடி, விளைபொருள்கள் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் என பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி விவசாயிகளின் நலனை காங்கிரஸ் எப்போதும் பாதுகாத்து வந்துள்ளது.  வரும் காலங்களிலும் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும்." என்றார்.

இதனைத் தொடர்ந்து கைமூர் மாவட்டம் மொஹானியா பகுதியில் மக்களிடம்ராகுல் காந்தி கூறியதாவது:  

"மத்திய நிதி நிலை அறிக்கையில், நாட்டின் பாதுகாப்புத் துறைக்கென ஒதுக்கப்படும் நிதியில், குறிப்பிடத்தக்க பங்கு தனியார் பெரு நிறுவனங்களுக்குச் செல்கிறது. பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்,  ராணுவ வீரர்களின் நலனுக்காக அல்ல.   பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட், ராணுவ வீரர்களின் ஊதியம், ஓய்வூதிய செலவுகளுக்கு அல்லாமல், பெருநிறுவனங்கள் பலனடையச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு 'அக்னிவீர்' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டம் வீரர்களிடையே அக்னி வீரர்கள், முழு நேர வீரர்கள் என்ற பாகுபாட்டை உருவாகியுள்ளது. பாதுகாப்புப் பணியின்போது காயமடைந்தாலோ அல்லது உயிரிழந்தாலோ அக்னி வீரர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்காத நிலையில், ஓய்வூதியமும் கிடையாது.  ராணுவ வீரர்களுக்கான மலிவு விலை அங்காடிகளையும் (ராணுவ கேன்டீன்) அக்னி வீரர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியாது."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Bharat Jodo Nyay YatraCongressElection2024Rahul gandhi
Advertisement
Next Article