Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திமுகவின் எதிரி யார் என்பதிலேயே போட்டி : விஜய் பேச்சுக்கு அமைச்சர் கோவி.செழியன் பதில்!

“திமுகவின் எதிரி யார் என்றுதான், மற்றக் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, திராவிட முன்னேற்றக் கழகம் நிலையாக செயல்பட்டு வருகிறது” என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
07:47 AM Mar 29, 2025 IST | Web Editor
Advertisement

சென்னை பெரம்பூர் ஜமாலியாவில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன், முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உட்பட பலர் கலந்து கொண்டு பொதுமக்களுடன் நோன்பு திறந்தனர்.

Advertisement

நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கோவி.செழியன்,

“திமுகவின் திறந்த நிலை வெளிப்பாடு என்ன என்பது எல்லாருக்கும் தெரியும்.  ஒளிவு, மறைவு இல்லாமல் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பது திமுக தான். முன்பக்கம் எதிர்ப்பது, பின்பக்கம் வரவேற்பது அல்லது முன் பக்கம் வரவேற்பது பின்பக்கம் எதிர்ப்பது என்ற இரட்டை நிலை, பண்பாடு எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடையாது.

திமுகவின் வரலாறு தெரியாமல்  தவெக தலைவர், நடிகர் விஜய்  கருத்தை சொல்வதாக தான் பார்க்கிறோமே தவிர, பொறுப்புள்ள ஒரு பொருட்டான கருத்தல்ல. விளையாட்டுத்தனமான, திமுக வரலாறு புரியாத ஒரு தலைவரின் கருத்து.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களால் வாக்களிக்கப்பட்டு, ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்டு, அதன் மூலம் திமுக ஆட்சி அமைந்து அமைச்சர்கள் பங்கேற்ற செயல்பட்டு வருகிறார்கள். இது ஒன்றும் மடமல்ல. ஜனநாயக நாட்டில் மக்கள் ஆதரவோடு நின்று வெற்றி பெற்று மக்கள் பணியாற்றுவது எப்படி குடும்ப ஆட்சி, மன்னராட்சி என்று சொல்ல முடியும். இது இயலாதவர்கள் புலம்பலேத் தவிர, திமுக கொள்கை கூடாரமாக பொலிவோடு செயல்பட்டு வருகிறது.

திமுகவின் எதிரி யார் என்றுதான் எதிரிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, திராவிட முன்னேற்றக் கழகம் நிலையாக செயல்பட்டு வருகிறது. எதிர்ப்பது யார் என்பதுதான் அவர்களுக்குள் போட்டி” என தெரிவித்தார்.

Tags :
Govi ChezhiaanMinister for Higher EducationtvkTVK Vijay
Advertisement
Next Article