சோதனையின் போது விழுந்து நொறுங்கிய சீன ராக்கெட்!
உலகின் பல வல்லரசு நாடுகளும், வளர்ந்து வரும் நாடுகளும் பொருளாதாரப் போட்டியை போலவே விண்வெளி ஆராய்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் விண்வெளிக்கு தங்கள் ஆய்வு கலன்களை அனுப்பி நிலா மற்றும் பிற கோள்களை ஆய்வு செய்து வருகின்றன.
அந்த வகையில் சீனாவும் விண்வெளியில் மறு பயன்பாட்டு ராக்கெட் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சீனாவின் விண்வெளி முன்னோடி ஆய்வு நிறுவனமான தியான்பினங் டெக்னாலஜிஸ் அண்ட் கோ, தியான்லாங் 3 என்ற ராக்கெட்டினை உருவாக்கியது. இந்த ராக்கெட்டு தரையில் பொருத்தி சோதிக்கப்பட்டபோது எதிர்பாராத விதமாக விண்ணில் பாய்ந்து நொருக்கியது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "தியான்லாங் 3 ராக்கெட்டை நிலையாகப் பொருத்தி சோதனை நடத்தப்பட்டது. ஆனால், கட்டமைப்பு கோளாறு காரணமாக அந்த ராக்கெட் எதிா்பாராத விதமாக விண்ணில் பாய்ந்தது. இருப்பினும், அது மக்கள் வசிக்காத மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதால் யாரும் காயமடையவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.