Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் நடத்தும் சூழலில் இருக்கிறார் முதலமைச்சர்" - கனிமொழி எம்.பி.விமர்சனம் !

தமிழ் இனத்தை அவமதிக்கும் சில கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் நடத்த வேண்டிய சூழலுக்கு நம் முதலமைச்சர் தள்ளப்பட்டு இருக்கிறார் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
07:28 AM Jan 30, 2025 IST | Web Editor
Advertisement

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுகவின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தென்காசி மாவட்டம் சுரண்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக துணை பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.

Advertisement

அப்போது, "அரசியலில் சிலர் நாட்டு மக்களுக்காக தன்னை சாட்டையால் அடித்துக் கொள்வதாக கூறிய நிலையில், 50 ஆண்டுகால அரசியல் பாரம்பரியத்தோடு செயல்பட்டு வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பெயர் சொல்லும் அளவிற்கு கூட சிறந்த எதிரி அமையவில்லை. தமிழ் இனத்தின் துரோகிகளை எதிர்த்து தமிழன் என்று கூறி தமிழர்களையும், தந்தை பெரியாரையும் கொச்சைப்படுத்தும் சில கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் நடத்த வேண்டிய சூழலுக்கு நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டு இருக்கிறார்.

தமிழ்நாட்டில் பொழுதுபோக்கிற்காக ஒரு ஆளுநர் இருக்கிறார். அவர் ஒரு ஆளுநரை போல் செயல்படாமல் அரசியல்வாதியாகவும், எதிர்க்கட்சியில் இருப்பவர் போன்று செயல்படுகிறார். தேசிய கீதத்தை பாதுகாக்கிறோம் என்று கூறி, அதே தேசியகீதத்தை அவமதிக்கும் நோக்கில் ஆளுநரின் பதவி என்னவென்று தெரியாமல் சட்டமன்றத்தில் இருந்து பாதியில் எழுந்து சென்றுவிடுவார்.

பல்கலைக்கழகங்களுக்கு நிர்வாகிகளை கூட நியமிக்க முடியாமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று நீதிமன்றம் கேட்கும் அளவிற்கு ஒரு ஆளுநரை கொண்டு தமிழ்நாட்டில் நாம் ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம்" என்று விமர்சனம் செய்துள்ளார்.

Tags :
againstCHIEF MINISTERCriticismDMKKanimozhi MPMKStalinPoliticsspeechTenkasi
Advertisement
Next Article