Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு - குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுமீது பதில் அளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

05:53 PM Dec 20, 2024 IST | Web Editor
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இருந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக நாகேந்திரன், அஸ்வத்தாமன், அருள், பொன்னை பாலு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். தலைமறைவாக உள்ள சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இவ்வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்திருந்த நிலையில், வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நாகேந்திரன் தரப்பில், மருத்துவ காரணங்களுக்காக நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கிற்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்து, வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பொற்கொடி, அஞ்சலை, மலர்கொடி ஆகியோர் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த மனுக்களுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, அடுத்த விசாரணையில் இருந்து நாகேந்திரன் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜராக அனுமதியளித்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Tags :
ArmstrongBSPchennai courtmurder caseTN Police
Advertisement
Next Article