Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மெரினா பீச்சில் அட்ராசிட்டி செய்த ஜோடிக்கு ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்!

12:24 PM Nov 08, 2024 IST | Web Editor
Advertisement

மெரினாவில் காவலர்களிடம் தகராறு செய்து அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் உள்ள ஜோடிக்கு ஜாமின் வழங்கப்பட்டது. 

Advertisement

சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் காவல்துறையினரை மிகவும் அவதூறாக பேசிய தம்பதி குறித்த செய்தி தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது உதயநிதியிடம் சொல்லவா என்று துணை முதல்வர் பெயரைக் கூட பயன்படுத்தி அவர்கள் காவல்துறையினரை மிரட்டி இருந்தனர். அவர்கள் உண்மையான கணவன் மனைவி கிடையாது.

கைது செய்யப்பட்டவர்களின் பெயர் சந்திரசேகர் மற்றும் தனலட்சுமி. இருவரும் போலீஸ்காரர்களை மிரட்டிய வீடியோ வைரலான நிலையில் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் வந்த நிலையில் அவர்கள் இருவரையும் இன்னும் எத்தனை நாட்கள் தான் சிறையில் வைக்க போகிறீர்கள் என்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.

முன்னதாக இருவரும் தாங்கள் பேசியது தவறு என்று கூறி மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருவரும் நடந்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா இன்னும் எத்தனை நாட்கள் தான் அவர்களை சிறையில் வைக்கப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதோடு அவர்களை ஜாமினில் விடுதலை செய்த உத்தரவிட்டார்.

மேலும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில், சந்திரசேகர் மட்டும் தினசரி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
Next Article