மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வாக ரூ.1,78,173 கோடியை விடுவித்தது மத்திய அரசு! தமிழகத்திற்கு ரூ.7,268 கோடி... உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.31,962 கோடி!
தமிழ்நாடு உள்பட 28 மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.31,962 கோடி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு ரூ.7,268 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அக்டோபர் மாதம் வழங்க வேண்டிய தொகையுடன் கூடுதலாக ஒரு மாத தவணையை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதாவது கூடுதல் தவணையாக முன்கூட்டியே ரூ.89,086.50 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதன்படி தமிழகத்தின் பங்காக ரூ.7,268 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டும், மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்துவதற்கும், அவற்றின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த செலவினங்களுக்கு நிதியளிக்கும் வகையிலும் இவ்வாறு ஒரு மாத தவணையை முன்கூட்டியே விடுவித்துள்ளது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.31,962 கோடி, பீகாருக்கு ரூ.17,921 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 28 மாநிலங்களுக்கும் எவ்வளவு நிதி விடுவிக்கப்பட்டிருக்கிறது என்ற முழு விவரத்தை கீழே காணலாம்.
தமிழ்நாடு - 7,268 கோடி
ஆந்திரா - 7,211 கோடி
அருணாச்சல் பிரதேசம் - 3,131 கோடி
அசாம் - 5,573 கோடி
பீகார் - 17,921 கோடி
சட்டீஷ்கர் - 6,070 கோடி
கோவா - 688 கோடி
குஜராத் - 6,197 கோடி
ஹரியானா - 1,947 கோடி
ஹிமாச்சல் பிரதேசம் - 1,479 கோடி
ஜார்கண்ட் - 5,892 கோடி
கர்நாடகா - 6,498 கோடி
கேரளா - 3,430 கோடி
மத்திய பிரதேசம் - 13,987 கோடி
மகாராஷ்டிரா - 11,255 கோடி
மணிப்பூர் - 1,276 கோடி
மேகாலயா - 1,367 கோடி
மிசோரம் - 891 கோடி
நாகாலாந்து - 1,014 கோடி
ஒடிஷா - 8,068 கோடி
பஞ்சாப் - 3,220 கோடி
ராஜஸ்தான் - 10,737 கோடி
சிக்கிம் - 691 கோடி
தெலங்கானா - 3,745 கோடி
திரிபுரா - 1,261 கோடி
உத்தரப்பிரதேசம் - 31,962 கோடி
உத்ரகாண்ட் - 1,992 கோடி
மேற்கு வங்கம் - 13,404 கோடி