“மத அரசியலுக்கு பூஜ்ஜியத்தை தரக்கூடியது இந்த மக்களவைத்தேர்தல்!” - கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு
மத அரசியலுக்கு பூஜ்ஜியத்தை தரக்கூடியது இந்த மக்களவைத்தேர்தல் என மக்களவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கூறியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எல்லோருக்கும் எல்லாம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 71 ஆம் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தஞ்சையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற மக்களவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி பேசுகையில், தமிழ்நாட்டு மக்கள் புண்படும் விதமாக தமிழக ஆளுநர் தொடர்ந்து பேசி வருகிறார். பிரதமர் அவ்வப்போது பெயருக்கு ஓரிரு திருக்குறளைப் பேசுகிறார். இதை வைத்து தமிழ் தொன்மையான மொழி என பிரதமரே பேசிவிட்டார் என விளம்பரம் செய்கின்றனர். தமிழ் தொன்மையான மொழி என்பது இவர்கள் பேசித்தான் தெரிய வேண்டும் என்ற நிலை தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை. நம் மக்களுக்கு முன்பே தெரிந்த விஷயம் அது. ஆனால், தமிழுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகையை விட யாருக்கும் தெரியாத சம்ஸ்கிருத மொழிக்கு 22 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்படுகிறது.
காட்டுவதற்காக ரூ. 7 ஆயிரம் கோடிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிச் சென்றார்.
இந்த மண்ணின் பண்பாடு, கலாசாரம், மொழி உட்பட அனைத்தையும் காத்து நிற்கும்
அரணாக திமுக உள்ளது. இத்தேர்தலில் பெரிய வெற்றியை அடையப்போவதாகச் சிலர் கூறி வருகின்றனர். இந்த திராவிட மண்ணில் மத அரசியலுக்கும், தமிழ் துரோகிகளுக்கும்
இடமில்லை என பூஜ்ஜியத்தை துரத்தக்கூடியது தேர்தல் இது. இத்தேர்தல் வெறும்
அரசியல் வெற்றிக்கானது மட்டுமல்ல; நம்முடைய எதிர்காலம், இந்த நாட்டின்
அமைதியைப் பொருத்தது என்பதால், அதைக் காக்கும் கடமை நமக்கு இருக்கிறது என
மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்றார் கனிமொழி.
இக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டப்பேரவை
உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.