For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக்குழுவினர் 2-வது முறையாக ஆய்வு!

04:24 PM Jan 12, 2024 IST | Web Editor
தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக்குழுவினர் 2 வது முறையாக ஆய்வு
Advertisement

தூத்துக்குடி மாநகர் பகுதியில் வெள்ளச் சேதம் ஏற்பட்ட பகுதிகளில் மத்தியக் குழுவினர் 2-வது முறையாக இன்று (12.01.2024) ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17, 18 தேதிகளில் பெய்த மிக கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.  இதனை மத்தியக் குழுவினர் கடந்த டிசம்பர் மாதம் 20, 21 ஆம் தேதி ஆய்வு செய்தனர்.  இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று (12.01.2024)  இரண்டாவது முறையாக கீர்த்தி பிரதாப் சிங் தலைமையில் 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொள்வதற்காக வந்தனர்.

பின்னர் இக்குழுவினர், முதலாவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி உள்ளிட்டோருடன் வெள்ளப் பாதிப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து,  இரு பிரிவுகளாக, ஆய்வு மேற்கொண்டனர். ஒரு பிரிவினர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,  கருத்தப்பாலம் ஆதிபராசக்தி நகர்,  ஓம் சக்தி நகர், மாப்பிள்ளையூரணி,  அத்திமரப்பட்டி,  புன்னைக்காயல்,  பழைய காயல்,  அகரம்,  ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.  மற்றொரு குழுவினர் மறவன் மடம், முறப்பநாடு,  பேரூர்,  ஸ்ரீவைகுண்டம்,  ஏரல் ஆகிய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

Tags :
Advertisement