Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை தடுத்து நிறுத்திய பூனை! - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

10:41 AM Nov 22, 2023 IST | Web Editor
Advertisement

கோவையில் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை தடுத்து நிறுத்திய பூனையின்  செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Advertisement

கோவை கவுண்டம்பாளையம்,  சரவணா நகர் பகுதியில் உள்ள விஜர் என்பவரின் வீட்டில், 4  அடி நீளமுள்ள நாக பாம்பு வீட்டின் படிக்கட்டில் இருந்து வீட்டுக்குள் நுழைய முயன்றது.

அப்போது, வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் செல்லப்பிராணியான பூனை,  பாம்பை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்தது. பூனையின் சீறலை அறிந்தவுடன் வீட்டில் இருந்தவர்கள் கதவை மூடியதுடன், வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையை சார்ந்த பாம்பு பிடி வீரருக்கு  தகவல் அளித்தனர்.

இதையும் படியுங்கள்:காஸா மீது 4 நாட்கள் போர்நிறுத்தம்! இஸ்ரேல் அறிவிப்பு!

மேலும், தகவலையடுத்து விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் பாம்பை பிடித்து பாட்டிலில் அடைத்து எடுத்துச் சென்றார். வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த செல்லப்பிராணியான பூனை, வீட்டிற்குள் பாம்பு நுழைவதை தடுத்து நிறுத்தியது.

அதனை தொடர்ந்து, பாம்பும் பூனையும் ஒன்றுக்கொன்று 15 நிமிடம் அசையாமல் பார்த்துக் கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  பூனை மற்றும் பாம்பு ஒன்றுக்கொன்று அசையாமல் பார்த்துக்கொள்ளும் காட்சியை நெகிழ்ச்சிக்குரிய விஷயமாக பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Tags :
#Cobra#SocialMedia#stoppedcatCoimbatoreenter the houseViral
Advertisement
Next Article