Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து வழக்கு - ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

01:28 PM May 03, 2024 IST | Jeni
Advertisement

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தன்னை கைது செய்த அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Advertisement

ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இருந்தபோது ராஞ்சியில் 8.5 ஏக்கர் நிலத்தைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து நில மோசடி தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக, ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கடந்த ஜனவரி 31-ம் தேதி கைது செய்தது. அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

அமலாக்கத்துறையின் இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தொடர்ந்து வழக்கின் தீர்ப்பானது ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : பட்டமளிப்பு விழாவில் RCB ஜெர்சியை அசைத்து காட்டிய விராட் கோலி ரசிகை - அமெரிக்காவில் நடந்த சுவாரஸ்யம்!

இந்நிலையில் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு மீது இன்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி எஸ்.சந்திரசேகர், நீதிபதி நவநீத் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Tags :
ArrestEDEnforcementDirectorateExCMHemantSorenJharkhand
Advertisement
Next Article