For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பேரரசர் நெப்போலியன் அணிந்திருந்த தொப்பி ரூ. 17.5 கோடிக்கு ஏலம்!!

06:48 PM Nov 20, 2023 IST | Web Editor
பேரரசர் நெப்போலியன் அணிந்திருந்த தொப்பி ரூ  17 5 கோடிக்கு ஏலம்
Advertisement

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரான்ஸை ஆட்சி செய்த பேரரசர் நெப்போலியன் அணிந்திருந்த தொப்பி ரூ. 17.5 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

Advertisement

பிரான்ஸ் தொழிலதிபர் ஒருவர் கடந்த ஆண்டு உயிரிழந்தார். அவர்  சேகரித்து வைத்திருந்த பேரரசர் நெப்போலியனின் அரும்பொருள்கள், பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் ஞாயிற்றுக்கிழமை ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் நெப்போலியன் தொப்பிதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.  பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரான்ஸை ஆட்சி செய்து ஐரோப்பாவில் பெரும் வெற்றிகளைப் பெற்ற காலத்தில் பேரரசன் நெப்போலியன் இந்த தொப்பியைத்தான்  அணிந்திருந்தார்.

தொப்பி தொடக்கத்தில் 6.5 லட்சம் டாலர் என மதிப்பிடப்பட்டது. தொடர்ந்து தொகை உயர்ந்துகொண்டே சென்று முடிவில் 21 லட்சம் டாலருக்குத் தொப்பியை ஓஸுனா ஏல மையத்தின் தலைவர்  ஓஸுனா ஏலத்தில் எடுத்தார்.  பொதுவாக  தொப்பிகளின் இரு முனைகளும் முன்னும் பின்னும் இருக்குமாறுதான் மற்றவர்கள் அணிவார்கள். ஆனால், நெப்போலியன் மட்டும் தொப்பியின் இரு முனைகளும் தன் இரு தோள்களின் பக்கம் இருக்குமாறு அணிவார். இந்தப் பாணிக்குப் போர்க்களப் பாணி என்று பெயர்.

இதன் காரணமாக சண்டைகளின்போது, களத்தில் தங்கள் தலைவர் எங்கே இருக்கிறார் என்பதை நெப்போலியனின் படை வீர்ர்கள் எளிதில் அறிந்துகொள்ள முடியும். இன்னும் சில நாள்களில் நெப்போலியன் பற்றிய ஆர்வத்தை மக்களிடம் மீண்டும் தூண்டக்கூடிய ரிட்லி ஸ்காட்டின் எனும் திரைப்படம் வெளிவரும் நிலையில், இந்த ஏலம் நடந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement