இன்று மாலையுடன் நிறைவுபெறுகிறது 3ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம்!
மக்களவைக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 93 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது.
18-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவும் ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம்கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. மே 7ஆம் தேதி 10 மாநிலங்களில் 95 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மூன்றாம் கட்டத்தில் குஜராத் கர்நாடக, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு வரும் மே 7ந் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற உள்ளது. கோவா மற்றும் குஜராத்தில் மக்களவைத் தேர்தளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது மத்தியபிரதேச மாநிலம் பெத்துல் மக்களவை தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கான வாக்கு பதிவு தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குபதிவை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இன்று மாலை 6 மணியுடன் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைகிறது.