Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வடகலை தென்கலை இடையே அடிதடி - கொலை மிரட்டல் அளவுக்கு சென்ற கொடூரம்!

01:09 PM Jan 18, 2024 IST | Web Editor
Advertisement

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வடகலை தென்கலை என இரு பிரிவினர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக வாய் சண்டை தள்ளுமுள்ளாக இருந்த பிரச்னை தற்போது அடிதடி, கொலை மிரட்டல் வரை சென்றது. 

Advertisement

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்
திகழ்கிறது. தற்போது உலகமெங்கும் அத்திவரதர் கோயில் என பிரசித்து
பெற்றுவிட்டது. இந்நிலையில், ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தில் நடைபெறும் பாரிவேட்டை திருவிழாவில் வரதராஜபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

அந்த வகையில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து நேற்று (17.01.2024) புறப்பட்ட வரதராஜ பெருமாள், முத்தியால்பேட்டை, அய்யன்பேட்டை, கருக்கு பேட்டை,
திம்மராஜம்பேட்டை, கீழ் ஒட்டிவாக்கம், வெண்குடி, வாலாஜாபாத், புளியம்பாக்கம்
உள்ளிட்ட கிராமங்கள் வழியாக மண்டகப்படி கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார்.

இதையும் படியுங்கள் : “தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது” – பொது சுகாதாரத் துறை இயக்குநர்!

சுவாமி பார்வேட்டைக்கு வரும் போது வடகலை தென்கலை சார்ந்தவர்கள்
திவ்ய பிரபஞ்சம் பாடி வருவது தொண்டு தொட்டு வருகிறது. இந்நிலையில்,வடகலை தென்கலை பிரிவினர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக திவ்ய பிரபஞ்சம் யார்
முதலில் பாடுவது என்ற பிரச்னை உள்ளது. இது தொடர்பாக அனைத்து நீதிமன்றங்களும் வழக்கு பல ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளது.

இந்த பிரச்னைக்கு தற்காலிகமாக சென்னை உயர் நீதிமன்றம்  தீர்ப்பு அளித்தது. அதன்படி, இருபிரிவினர்களும் இக்கோயிலில் திவ்ய பிரபஞ்சம் பாட தடை விதித்தது. அதற்கு மாற்றாக தோஸ்த்ர பாடம் எனப்படும் சமஸ்கிருத பாடல்கள் பாடப்பட்டு வருகிறது. சுவாமி வைபவம் நடந்து கொண்டிருந்த போது வடகலை தென்கலை
இருபிரிவினர்களுகிடையே தோஸ்த்ர பாடம் எனப்படும் சமஸ்கிருத பாடல் பாடி வரும்
போது, வடக்கலை தென்கலை சேர்ந்தவர்களுக்குள் வாய் சண்டை ஏற்பட்டது.

அது சற்று நேரத்தில் தள்ளுமுள்ளாக மாறி கடைசியில் அடிதடியில் முடிந்தது. ஒரு பிரிவினரை மற்ற பிரிவினர் விரட்டி  தாக்குவதும், தப்பி ஓடுவதும் அங்கிருந்து கூடி இருந்த பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு இரு பிரிவினர்களும் சென்று விட்டனர்.

மேலும், ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பாரிவேட்டை திருவிழாவில் காஞ்சிபுரம்,
வாலாஜாபாத், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் பல்வேறு
ஊர்களை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அப்போது அவர்கள் வடகலை தென்கலை என இரு பிரிவினரும் மோதிக் கொண்ட காட்சியை கண்டு வேதனையுடன் கூறினார்.

Tags :
Devaraja Perumal TemplekancheepuramTenkalaiVadakala
Advertisement
Next Article