நண்பனை திட்டம் போட்டு கொன்ற கொடூரம் - விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி!
நீலகிரி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஹேமசந்திரன் (வயது 54) என்ற நபர் வயநாட்டில் தங்கி பணிபுரிந்து வந்த நிலையில், நண்பர்களுடன் சென்று ஒரு வாரமாக வீடு திரும்பாததால் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹேமச்சந்திரன் காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் புகாரின் அடிப்படையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்ததில் ஹேமச்சந்திரனின் நண்பர்களான ஜோபிஸ், ஆசிப் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் ஹேமச்சந்திரனை அடித்துக் கொலை செய்து தமிழக எல்லைப் பகுதியான சேரம்பாடி காப்பிகாடு வனப்பகுதிக்குள் உடலை புதைத்து சென்றதாக விசாரனையில் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த ஜூன் 28ஆம் தேதி ஹேமச்சந்திரன் உடல் கைப்பற்றப்பட்டு தடயவியல் மற்றும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது, இக் கொலையில் மூளையாக செயல்பட்ட நவ்ஷாத் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து கோழிக்கோடு பகுதிக்கு வருகை புரிந்த நிலையில் கேரள மாநில காவல்துறையினர் நவ்ஷாத்தை உடனடியாக கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஹேமச்சந்திரனை கொலை செய்து புதைத்த இடமான சேரம்பாடி காப்பி காடு வனப்பகுதியில் நவ்ஷாத்தை அழைத்துச் சென்று கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இரு மாநில காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஹேமச்சந்திரனை அடித்து கொலை செய்து வனப்பகுதியில் புதைத்தது காவல்துறை விசாரணையில் நவ்ஷாத் தெரிவித்துள்ளார்.
இதில் தொழிலில் ஏற்பட்ட விரோதம் காரணமாக தனது நண்பர்களால் திட்டமிடபட்டு ஹேமச்சந்திரன் அடித்து கொலை செய்யப்பட்டது காவல்துறை விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.