ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்பு!
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் உமர் ஹூசைன் ஆகியோரின் உடல்களை மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அசர்பைஜான் – ஈரான் இடையே பாயும் அரஸ் ஆற்றின் குறுக்கே, இரு நாடுகளும் இணைந்து கட்டிய 3-ஆவது அணையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அந்த அணை திறப்பு விழாவிற்காக ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நேற்று அசர்பைஜான் சென்றிருந்தார். அந்நாட்டு பயணத்தை முடித்துவிட்டு இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் திரும்பிக்கொண்டிருந்தார்.
அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹொசைன் அமிரப்டோலாஹியன், மாகாண ஆளுநா் மற்றும் அதிகாரிகளும் உடன் பயணித்ததாக கூறப்படுகிறது. அப்போது, அசர்பைஜானை ஒட்டியுள்ள ஈரானின் ஜல்பா நகரில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. தொடர்ந்து, ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கருத்தப்படும் பகுதியில் கடுமையான மழை மற்றும் பனி மூட்டம் இருப்பதால் மீட்புப்பணிகள் தாமதாமாகியுள்ளதாக தகவல் வெளியாகியது.
இதையும் படியுங்கள் : “சிறுபான்மையின மக்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை” – பிரதமர் மோடி!
இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டரின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், இந்த விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்நிலையில், விபத்து நடந்த அஜர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகர் மலைப்பகுதியில் இருந்து, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.